Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஓய்வு பெறும் வயது குறித்த சுற்றுநிருபம் வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிப்பதற்கான சுற்றுநிருபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டதை அடுத்து மேற்படி சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேவையேற்படின், தமது விருப்பத்திற்கு அமைய 55 வயதில் அரச சேவையாளர்கள் ஓய்வு பெற முடியும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று நள்ளிரவுடன் நிறைவு – மீறினால் நடவடிக்கை

wpengine

சஜித் தலைமையில் புதிய கூட்டணி

News Editor

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு…

wpengine