உள்நாட்டு செய்திகள்

வாரியபொல பிரதேச சபை தவிசாளர் நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து திலகரத்ன பண்டார திசாநாயக்கவை நீக்கும் அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரால் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் திலகரத்ன பண்டார, வாரியபொல பிரதேச சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

திவுலப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட திருப்புமுனை..

wpengine

பக்க சார்பின்றி செயலாற்றுமாறு விசேட அறிவுறுத்தல்

wpengine

அரச அதிகாரிகளது ஆடை தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

wpengine