Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் 45 நிமிடங்கள் மின் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசியம் கருதி, தினசரி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எவ்வாறாயினும், கோளாறு ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கியிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார மானவடு தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலையால் மத்தலயில் விமானங்கள் தரையிறக்கம்…

wpengine

வஸீம் கொலையாளிகளுக்கு அரச உயர்மட்ட அனுசரணை?

wpengine

தலைமை சவாலுக்கு தான் தயார்

wpengine