Top Story 3உள்நாட்டு செய்திகள்

மேஜர் ஜெனரல் லியனகேவிற்கு புதிய நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவ படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனத்திற்கு அமைய, இலங்கை இராணுவ படைகளின் 59 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே இன்று (07) முதல் கடமைகளை முன்னெடுக்கவுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, முன்னதாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பதவி வகித்திருந்தார்.

இலங்கை இராணுவப் படைகளின் 58 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து அப்பதவிக்கு மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமிக்கப்பட்டார்.

Related posts

ஜெக்குலின் பெர்னாண்டஸுக்கு இலங்கையில் வீடு கொள்வனவு..!

wpengine

ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஆராய்வு

wpengine

அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு..!

wpengine