கேளிக்கை

சமந்தா நடிக்கும் ‘யசோதா’



(ஃபாஸ்ட் நியூஸ் |  சென்னை) – ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இறுதியாக இந்தியில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இது தவிர்த்து சாந்தரூபன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் சமந்தா ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

இந்நிலையில் ஹரி – ஹரீஷ் இயக்கத்தில் சமந்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (06.12.21) தொடங்கப்பட்டது. இப்படத்துக்கு ‘யசோதா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு மணி ஷர்மா இசையமைக்கிறார்.

இப்படத்துக்குப் பிறகு வெப் சீரிஸ் ஒன்றிலும் சமந்தா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts

ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

wpengine

‘பூமி’க்கு வந்த சோதனை

wpengine

2016 இலங்கையில் பிரபலமான மொடல்கள் 10 பேரும் இவங்க தானாம்..

wpengine