உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற சம்பவங்கள் : ஆராய விசேட குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஆளும், எதிர்கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றிய போது, அதற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்குவதற்கும் முயற்சித்துள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்.

Related posts

மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை..

wpengine

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு தொடர்பில் உடன்பாடு..

wpengine

ஆனையிறவு உப்பு – உறுதியளித்த அமைச்சர்

Azeem Kilabdeen