உலக செய்திகள்

மோடியின் 1 கோடி நிதியை ஏற்கமறுத்த ‘எதி’ நிறுவனம்



மாற்றுத்திறனாளியான இந்தியப்பெண் கீதாவை பராமரித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ‘எதி’ தொண்டு நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர வழங்கிய ரூ.1 கோடி நிதியுதவி வாங்க அத்தொண்டு நிறுவனம் மறுத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி கீதா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு வழிதவறி சென்றுவிட்டார். அவரை பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கராச்சியில் உள்ள ‘எதி’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.

நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கராச்சி விமான நிலையத்தில் இருந்து கீதா இந்தியாவுக்கு புறப்பட்டார். அவருடன் எதி தொண்டு அமைப்பின் நிறுவனர் பஹத் எதி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரும் விமானத்தில் வந்தனர். விமான நிலையத்தில் கீதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் வந்த ‘எதி’ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 4 பேரும் அரசு விருந்தினர்களாக கௌரவிக்கப்பட்டனர்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த மோடி, அவர்களின் கருணைக்கும் அன்புள்ளத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. அவர்களின் சேவை விலை மதிப்பற்றதெனினும் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

இந்நிலையில் ‘எதி’ தொண்டு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அன்வர் கஸ்மி பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “ எதி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அப்துல் சத்தார் எதி, திரு.மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் அறிவித்தது நிதி உதவியை பணிவுடன் ஏற்க மறுத்துவிட்டார்” என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

தட்டம்மை நோயால் 1000க்கும் அதிகமானோர் பாதிப்பு

wpengine

Boeing ரக விமானங்கள் மீளவும் சேவையில்…

wpengine

காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகம் மீது குண்டுத்தாக்குதல்..

wpengine