உள்நாட்டு செய்திகள்

விநியோகத்திற்கு அமைவாக விலைகள் தீர்மானிக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்திற்கு அமைவாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தீர்மானிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அசாதாரணமான முறையில் பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் வியாபாரிகளுக்கு வழங்கப்படமாட்டாதென நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையூடாக தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார்.

சீனி, பருப்பு, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

உடனடி ஆபத்தில் உள்ள, நாடாக இலங்கை..!

wpengine

லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை – நாளை எதிர்ப்பு போராட்டம்

Azeem Kilabdeen