” அம்மா என்னை மன்னித்து விடுங்கள் ” எனக் கூறி கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு , புத்தகப் பை மற்றும் செருப்பை ஜிங் கங்கை அருகில் வைத்து விட்டு காணாமல் போன பாடசாலை மாணவனை பொலிஸார் தேடி வருவதாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது
ரத்கம தேவபதிராஜ வித்தியாலத்தில் கல்வி கற்று வந்த அவர் மாணவத் தலைவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அவரைத் தேடும் நடவடிக்கையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது அம் மாணவன் எழுதிய கடிதம், அவரது புத்தகப் பை மற்றும் செருப்பு ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது புதிய சப்பாத்து வாங்குவதற்கு பெற்றோர் வழங்கிய பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.