உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜெனீவா அறிக்கையை தோற்கடிப்போம் – வாசு



இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை, தோல்வியடைய செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை தொடர்பிலான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் மக்கள் என அனைவரும் இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதுபோல, ஜெனிவா அறிக்கையைவிட பரணகம அறிக்கை கடுமையானதாக இருந்தால் எமது நாட்டில், சாட்சிகளை விசாரித்து பரணகம அறிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

ஹெரோயின் 4 கிலோகிராமுடன் பாகிஸ்தான் பிரஜை கைது…

wpengine

ஊடகவியலாளர் லசந்த’வின் பிரேத பரிசோதனைகளில் முரண்பாடு..

wpengine

வெளிநாட்டு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

wpengine