உலக செய்திகள்

இந்தியாவுக்கெதிராக அமெரிக்காவிடம் போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்



அமெரிக்காவிடம் இருந்து எஃப்-16 எனப்படும் அதிநவீன போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது, என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது; எனினும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷெரீஃபின் பயணத்தின்போது வெள்ளை மாளிகை வெளியிடுமா? என்பது தெளிவாகவில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ள குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்கலாம் என்ற யோசனையை முன்வைத்தபோது, அந்த விமானங்களை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக இந்தியாவுக்கு எதிராகவே பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்தும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கவலை தெரிவித்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் மேலும் தெரிவிக்கிறது.

 

Related posts

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழப்பு

Azeem Kilabdeen

முதல் ஊடக சந்திப்பு : சுமார் 50 நிமிடங்கள்

wpengine