Top Story 1உள்நாட்டு செய்திகள்

PANDORA PAPERS ஆவணங்கள் ஆய்வுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், பல்வேறு தரப்பினர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன், இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானார்.

முற்பகல் 11 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், 2 மணிநேரத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

திருக்குமரன் நடேசன், பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், கடந்த 8 ஆம் திகதி, முதல் முறையாகக் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி சீனாவுக்கு

wpengine

இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை

wpengine

முகநூல்(Facebook) தொடர்பில் ஒரு கொள்கைத் தீர்மானம்…?

wpengine