உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (07) மழையுடனான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

தெற்கு அதிவேக வீதியில் வெள்ள நிலை காரணமாக சில வாயில்களுக்கு பூட்டு..

wpengine

ரஞ்சன் இடத்திற்கு அஜித் மான்னப்பெரும

wpengine

உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது

wpengine