உள்நாட்டு செய்திகள்

NMRA விவகாரம் : பிணை மனு நிராகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை தரவுகள் (NMRA) அழிக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த தனியார் நிறுவனமொன்றின் மென்பொருள் பொறியியலாளரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேக நபரின் பிணை மனுவை நீதவான் நிராகரித்ததுடன், ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் திவுலபிட்டியவைச் சேர்ந்த குறித்த மென்பொருள் பொறியியலாளரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த செப்டெம்பர் 28 ஆம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற குழுக்கள் சிலவற்றுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்

Azeem Kilabdeen

பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் 2ஆம் கட்டம்

wpengine

அரச ஊழியர்கள் அடுத்த வாரம் தொடக்கம் பணியிடங்களுக்கு

wpengine