உள்நாட்டு செய்திகள்

இன்றைய காலநிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு..

wpengine

இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன…

wpengine

சைட்டம் தீர்ப்புக்கு எதிராக இலங்கை வைத்திய சபை மேன்முறையீடு…

wpengine