உள்நாட்டு செய்திகள்

இன்று இடியுடன் கூடிய மழை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று(25) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய, வடகிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வபோது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், மேற்குறிப்பிடப்பட்ட பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான, பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

News Editor

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை.

wpengine

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது…

wpengine