உள்நாட்டு செய்திகள்

இன்று இறுதித் தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு இன்று அலரி மாளிகையில் கூடவுள்ளது.

பால்மா விலையை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமையல் எரிவாயு, அரிசி, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பன தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இதேநேரம், கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிரான புதிய அபராதத் தொகை அறவீடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

Related posts

மீன்பிடித் துறைமுகங்களை குத்தகைக்கு வழங்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு..

wpengine

அரச தாதியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது..

wpengine

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களது உதவியின் போது

wpengine