உள்நாட்டு செய்திகள்

மேலும் 63 வாகனங்கள் பறிமுதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 60,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 641 வாகனங்களில் பயணித்த 1,128 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்களில் பயணித்த 901 பேரும் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு…

wpengine

மேலும் 46 பேருக்கு தொற்று

wpengine

”அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஓட்டைக்கு துணை போனோல் பேராபத்தைச் சந்திக்க நேரிடும்” – பாணந்துறையில் ரிஷாட்

wpengine