உள்நாட்டு செய்திகள்

மேலும் 151 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நடைமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 52,154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கூட்டு எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் போராட்ட பாத யாத்திரை 28 அன்று..

wpengine

பாராளுமன்றில் சபாநாயகர் தலைமையில் இன்று 70 வருட நிறைவு விழா விசேட அமர்வு..

wpengine

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை..

wpengine