உள்நாட்டு செய்திகள்

தீர்மானம் வழங்கும் வரை பணிப்புறக்கணிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர்களின் சிக்கல்களை தீர்ப்பதற்கு கல்வி அதிகாரிகளுக்கு எவ்வித தேவையும் இல்லை என இலங்கை ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு தரப்பும் இதுவரை கலந்துரையாடல்களுக்கு வரவில்லை என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது உட்பட பல கோரிக்கைகள் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை முதல் ஆசிரியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தீர்மானம் வழங்கும் வரையில் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரிக்கை

wpengine

கோதுமை மாவின் விலை எகிறியது

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

Azeem Kilabdeen