உள்நாட்டு செய்திகள்

கட்டட தாழிறங்கியதால் சாரதிகளுக்காக அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குருநாகல் – கண்டி வீதியில் கட்டுகஸ்தோட்டை முச்சந்திக்கு 02 கிலோமீற்றர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று நேற்று (12) மாலை தாழிறங்கியுள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், மறு அறிவித்தல் வரை கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில் கனரக வாகன போக்குவரத்தில் இருந்து விலகியிருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டடம் தாழிறங்கியமையினால் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறையில் 33 கையடக்கத் தொலைபேசிகள், 35 சிம் அட்டைகளை கண்டுபிடிப்பு..!

wpengine

நோர்வே பிரதமர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இலங்கைக்கு விஜயம்.

wpengine

தொடர்ந்தும் சைனோபாம் இரண்டாம் செலுத்துகை

wpengine