உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் மனு : மற்றுமொரு நீதியரசர் விலகல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் விலகியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்து இதுவரையில் மூன்று நீதியரசர்கள் விலகியுள்ளனர்.

குறித்த மனு எதிர்வரும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து சி.ஐ.டி.யினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(விரிவான  தகவல்கள் விரைவில்)

Related posts

கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்..

wpengine

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அனுமதி..!

wpengine

வடக்குக்கான ரயில் சேவை பாதிப்பு

wpengine