Top Story 1உள்நாட்டு செய்திகள்

‘சைனோபாம்’ திருடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட 30 சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த பெறுமதி 90,000 ரூபா என தெரிய வந்துள்ளது.

மேற்படி சுகாதார பணிமனையில் திருடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி இந்தியா விஜயம்…

wpengine

பியகம பகுதியில் 31 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

wpengine

மஹிந்த இராஜினாமா

wpengine