உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி



(ஃபாஸ்ட் நியூஸ் | வொஷிங்டன்) – இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராகவும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளை தொழிற்சங்க போராட்டம்

wpengine

தமிழ் மொழிச் சமூகங்களின் போருக்குப் பின்னரான புரிதல்..

wpengine

பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் சீனாவின் பீஜிங் வந்தடைந்தார்

Azeem Kilabdeen