உலக செய்திகள்

பாடசாலை மைதானத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் |  கனடா) – கனடாவில் உள்ள மூடப்பட்ட பாடசாலை ஒன்றின் மைதானத்தின் கீழ் 215 குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் கம்ப்ளூப்ஸ் பகுதியில் உள்ள மூடப்பட்ட பாடசாலை ஒன்றின் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ராடார் ஆய்வில் 215 குழந்தைகள் எலும்புகூடுகள் புதைந்து கிடக்கும் சம்பவம் தெரிய வந்துள்ளது.

1978 முதலாக மூடப்பட்டிருக்கும் அந்த பாடசாலையானது பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஐரோப்பியர்கள் கனடாவை ஆக்கிரமித்தபோது அங்கிருந்த பழங்குடி குழந்தைகளை தங்கி படிக்க வைக்க பயன்படுத்திய பாடசாலையாகும்.

அப்போதைய காலகட்டத்தில் பழங்குடி மக்களின் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையின் தடயமாக இது கருதப்படுகிறது. இதுகுறித்து கனடா மக்கள் அந்த பாடசாலை முன்னர் கூடி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், வரலாற்றில் நடந்த துயரமான சம்பவத்தை எண்ணி வேதனை அடைவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Related posts

துருக்கி – சிரியா எல்லையில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்..!

wpengine

இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா

wpengine

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களை முற்றுகையிடுமாறு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அழைப்பு..!

wpengine