உலக செய்திகள்

மலேசியா முற்றாக முடங்கியது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மலேசியாவில் வரும் ஜூன் 14 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மலேசியாவில் வெள்ளிக்கிழமை 8 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 1-14-ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு நாள்களில் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் 7 ஆம் திகதி வரை பகுதியளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தொற்று பாதிப்பு அதிகரிப்பையடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இதுவரை 5,49,514- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

ஆளும் கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களது தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கசிவு…

wpengine

கூகுள் தலைமை அதிகாரியாக தமிழர் சுந்தர்பிச்சை நியமனம்

wpengine

இந்தோனேசியா: கால்பந்து அரங்கில் கலவரம் – நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

wpengine