உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்றில் இலத்திரனியல் முறைமைப்படி வாக்கெடுப்பு



இலத்திரனியல் முறைமைப்படி நாடாளுமன்றில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாடாளுமன்றில் மேற்கொள்ளப்பட உள்ள வாக்கெடுக்களை இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான நிலையியற் கட்டளையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும். இதற்காக நாடாளுமன்றின் ஒலி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது.

தற்போது நாடாளுமன்றில் காணப்படும் ஒலி கட்டமைப்பு 15 ஆண்டுகள் பழமையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றில் சட்டப் பிரேரணைகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ரூபா. 2500 இற்கு எதிராக தனியார் பேரூந்து சங்கம் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.

wpengine

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

wpengine