ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நீதிமன்றம் சென்று வீடுதிரும்பிய இளம் குடும்பப் பெண் கடத்தல்


வழக்குக்காக நீதிமன்றம் சென்றுவிட்டு தாயாரோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை வானில் வந்த இனந்தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை மதியம் யாழ்ப்பாணம் -வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது:

இதில் இதே இடத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் தனது கணவரிடம் இருந்து தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்காக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று இடம்பெற்றது.

இந்த வழக்குக்குத் தனது தாயாருடன் சமுகமளித்துவிட்டு இருவரும் பஸ்ஸில் வீடு திரும்பினர். பஸ் தரிப்பிடத்தில் இறங்கிய இவர்கள் நடந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத குழு ஒன்று குறித்த பெண்ணின் வாயைப் பொத்தி பலவந்தமாக வானில் ஏற்றிச் சென்றனர் என அவரின் தாயார் வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்..

Related posts

மாடு கடத்திச் சென்றவர்களை பொலிஸார், துப்பாக்கிச் சூடு நடத்திபிடி த்துள்ளனர்.

wpengine

துாக்குமரம் உயிர் பெறுகின்றது!! கைதிகள் கடும் அச்சம்

wpengine

ஓட்டல் டாய்லெட் ரோல் பேப்பரில் ஒபாமாவின் புகைப்படங்கள்

wpengine