உள்நாட்டு செய்திகள்

ஜனக பண்டாரவுக்கு எதிராக அலுவிஹாரே கொலைக் குற்றச்சாட்டு



முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எதிராக, மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் ஜனக பண்டாரவிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

இதுகுறித்து சட்ட மா அதிபர் யுவான்ஜித் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.

2000ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்லேபொல தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, என்னை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இன்னும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமிந்த டயஸ் மற்றும் லக்ஷ்மன் துல்வல ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை.

மீளவும் விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாக ரஞ்சித் அலுவிஹாரே சகோதர ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்க பணிப்பு..!

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் – கோட்டாபயவுக்கு ஆதரவளித்த மல்கம் ரஞ்சித், எனக்கெதிராக வாக்களிக்க கூறினார்..!

wpengine

ஒரே நாளில் 300 தொற்றாளர்கள்

wpengine