உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு 14 மில்லியன் சினோபார்ம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகள் ஜூன் மாத ஆரம்ப பகுதியில் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்திருந்தது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தடையும் எனவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்…

wpengine

அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

எம்பிலிப்பிட்டிய விவகாரம் – ஏ.எஸ்.பி.க்கு விளக்கமறியல்

wpengine