Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரிஷாத் – ரியாஜ் 3 மாத தடுப்பு காவலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த இருவரையும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை(24) குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

wpengine

பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் கொள்வனவு!!!

Azeem Kilabdeen

டுவிட்டர் சமூக வலைத்தளம் முடக்கம்

wpengine