உள்நாட்டு செய்திகள்

பேரூந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் உள்வாங்கப்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்கு இன்று(24) முதல் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேரூந்து மற்றும் ரயில்களில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இராஜாங்க அமைச்சர் இதனை இன்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விதிமுறைகளை மீறி பயணிக்கும் பேரூந்து சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாட்டினை பதிவு செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் இவ்வாறு அடையாளங் காணப்படுவோர் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காலை 8 மணிக்கெல்லாம் ஆபீஸ் போகிற மாதிரி குரங்குகள் வராது.. இரவு 12 மணிக்கு குரங்குகளை எண்ணுங்கள்..

Azeem Kilabdeen

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்டவர்கள் கைது

wpengine

சுதந்திர சதுக்கத்தில் விநோதப் போராட்டம் – உட்புக தடைபோட்டது அரசாங்கம்

wpengine