ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

குழப்பத்தின் உச்சகட்டத்தில் மஹிந்த?



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தன்னை காட்டிகொடுப்பதற்கு தன்னுடன் இருந்தவர்களே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்யாதவர் என்றால் எதற்கு காட்டிக்கொடுப்பிற்கு பயப்பட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், இதுவரையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் அதிக முன்னேற்றத்தையடைந்துள்ளதனால் முன்னாள் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதென தான் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரேனும் மக்கள் பணத்தை சுரண்டினால், குற்றம் செய்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே மோசடி செய்து மக்கள் பணத்தை சுரண்டிய நபர்கள் சட்டத்தின் முன் செல்வதற்கு ஆயத்தமாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவலத்துவல மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)

Related posts

4 மாதத்தில் யானை மனித மோதல்களால் 34 பேர் பலி!

News Editor

ரஜரட்ட பல்கலைக்கழக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்…

wpengine

கட்டுநாயக்கவில் விமானம் லொறி மோதி விபத்து

wpengine