Top Story 1உள்நாட்டு செய்திகள்

விஜயதாசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விஜயதாச ராஜபக்ஷ விமர்சனம் செய்த காரணத்தினால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ஷவின் அரசியல் வரலாறு மற்றும் நடத்தைகளை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்மை கடுந்தொனியில் இழிவாக மிகவும் கீழ்த்தரமாக திட்டியதாக விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் நடக்கும் கொலைகளின் பின்னணி – வெளியான அதிர்ச்சித் தகவல்

wpengine

சுகாதார பணியாளர்கள் வேலைநிறுத்தம்…

wpengine

மேலும் சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

wpengine