உள்நாட்டு செய்திகள்

வெலி ஓயா : சடலங்கள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் |  பதுளை) – ஹல்தமுல்ல – வெலி ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பதுளை – ஹல்தமுல்லை – களுபான – வெலி ஓயாவில் நீராடச் சென்ற நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ள தந்தையையும், மகனையும் தேடும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேசத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற நான்கு பேரில், தந்தையும், மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

இதேநேரம், ஏனைய இரண்டு பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிப்பு..

wpengine

SLFP மற்றும் SLPP முதல் பேச்சுவார்த்தை வெற்றி- 02ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம்…

wpengine

கம்மன்பில உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் குழாம் சத்தியப்பிரமாணம்…

wpengine