விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள் அணியினை முதல் இன்னிங்சில் சுருளச்செய்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் அணிகள்



மேற்கிந்திய தீவுகள்- இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் அணிகள் மோதிய பயிற்சிப் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் லெவன் -மேற்கிந்திய தீவுகள் அணிகள் விளையாடியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 209 ஓட்டங்களில் சுருண்டது. இலங்கை அணி சார்பில் ரந்தீவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணி விளையாடியது. முதல் இன்னிங்சின் முதல் பந்தில் மெண்டீசும், 2வது பந்தில் திரிமான்னேவும் டக்- அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.

அதன்பின் வந்த ஜெயசுந்தேரா, பனுகா, சிறிவர்த்தனா ஆகியோர் நிதானமாக விளையாடி சதம் அடித்தனர். ஜெயசுந்தேரா 142 ஓட்டங்களும், பனுகா 101 ஓட்டங்களும், சிறிவர்த்தனா 105 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனால் இலங்கை கிரிக்கெட் வாரிய லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 455 ஓட்டங்கள் குவித்தது. இந்நிலையில் 3 நாட்கள் கொண்ட ஆட்டம் முடிவடைந்ததால் இந்த போட்டி டிராவில் முடிந்தது.

 

(riz)

Related posts

மகளிருக்கான உலகக்கிண்ண தொடர் 21ஆம் திகதி ஆரம்பம்

wpengine

BPLபோட்டிகள் ஒத்திவைப்பு…

wpengine

இன்று ஒரு நாள் போட்டியில் சாதிக்க இருக்கும் வீரரின் விவரம் இது தான்…

wpengine