உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைது செய்ய பிடியாணை



வழக்கு விசாரணை ஒன்றுக்காக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புனித அல்-குர்ஆன் இற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேன அமைப்பின் ஊடகவிலயாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து சர்சையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த விடயங்கள் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று(12) விசாரணைக்கு வந்தது. இதன்போது குறித்த மூவரும் ஆஜராகத் தவறியமையால் இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

(riz)

Related posts

சபீர் ரஹ்மான் குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழு விசாரணை..

wpengine

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!

wpengine

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

wpengine