உள்நாட்டு செய்திகள்வணிகம்

தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்பவும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யுடன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 95 கொள்கலன்களை திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் சுமார் 1,000 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ், மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அப்பிள் கணக்கு கடவுச்சொல்லை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அர்ஜுன் அலோசியசிடம் பணிப்பு

wpengine

மோட்டார் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் பதற்றநிலை – பொலிசார் குவிப்பு..

wpengine

பூரண குணம் : 30,000 இனைக் கடந்தது

wpengine