விளையாட்டு

நயாமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி



(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜப்பான்) – நயாமி ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ‘நம்பர்–2’ ஜப்பானின் நவோமி ஒசாகா, 25வது இடத்தில் உள்ள கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி மோதினர். முதல் செட்டை 0–6 என இழந்த ஒசாகா, 2வது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 9 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய ஒசாகா 0–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 23 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒசாகாவின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மற்றொரு காலிறுதியில் கனடாவின் பியான்கா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டார்மோ மோதினர். அபாரமாக ஆடிய பியான்கா 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related posts

ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை அணியின் தலைவர் தசுன் சானகா..!

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கான அணி விவரம் – தலைமை தனஞ்ஜயவிடம்..

wpengine

ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 35 ஓட்டங்களால் வெற்றி

wpengine