Top Story 3உள்நாட்டு செய்திகள்

பதினெட்டு மணித்தியால நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளையின் சில பிரதேசங்களில் நாளை(31) முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை(31) இரவு 10 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 4 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை – நீர்கொழும்பு வீதி, எவரிவத்த வீதி, தெலங்கபத்த, மீகஹவத்த, ஹேகித்த, பல்லியாவத்த, வெலியமுன வீதி, பலகல, கலஹாதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியின் ஒரு பகுதி ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொவிட் – 19 : ராஜாங்கனையில் சில பகுதிகள் முடக்கம்

wpengine

கரையோர புகையிரத சேவைகளில் தாமதம்

wpengine

நீர் வழங்கல் தொடர்பான பிரச்சிணை; தொலைபேசி இலக்கம் அறிமுகம்

wpengine