உள்நாட்டு செய்திகள்

சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாடசாலை மாணவர்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் மேல் மாகாணத்தில் உள்ள சகல தர மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசங்கள் அணியாமல் வாகனங்களில் பயணிப்பதற்கு இடமளிக்க கூடாது என்றும் இந்த விடயம் தொடர்பில் சகல பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் சாரதி, நடத்துனர் அல்லது உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிக்கட்ட பணிகள் அடுத்த வாரமளவில்..

wpengine

தகவல் தெரிந்தால் வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை…

wpengine

இலங்கை – ஆஸி இருபதுக்கு இருபது போட்டிக்கான அணி விவரம்..

wpengine