Top Story 1உள்நாட்டு செய்திகள்

அஸ்ட்ரா செனெகா வருவதில் தாமதமில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையினால் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 10 இலட்சம் தடுப்பூசிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தியா, தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை இதனைப் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளின், அனைத்து ஏற்றுமதிகளையும் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிகரித்துவரும் நோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் உள்நாட்டு தேவையை அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தினால், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதாளக்குழு மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரபல கைதிகள் பூஸ்ஸ சிறைக்கு மாற்றம்

wpengine

எவன்காட் வழக்கு விசாரணை, ஜூன் 26 ஆம் திகதி முதல்…

wpengine

விசாரணைகளுக்கு 3 பேர் கொண்ட குழு நியமனம்

wpengine