உலக செய்திகள்

சொந்த சமூக வலைத்தளத்தினை உருவாக்கும் முயற்சியில் ட்ரம்ப்



(ஃபாஸ்ட் நியூஸ் | வாஷிங்டன்) – அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகத் தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வி அடைந்த நிலையில் எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.‌

இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கின.

இந்நிலையில் டிரம்ப் மிகவிரைவில் தனக்கென சொந்தமாக ஒரு தளத்தை அமைத்து சமூக ஊடகத்துக்கு திரும்புவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்

wpengine

ஆபாச படம் பார்ப்பத்தில் இந்தியர் முன்னிலையில்

wpengine

கொரோனாவிலிருந்து ஒரு கோடி பேர் குணமடைந்தனர்

wpengine