உள்நாட்டு செய்திகள்

ராஜகிரிய விபத்தில் இருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, ராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகடை மேம்பாலம் மற்றும் ஆயுர்வேத சுற்றுவட்டத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உப பரிசோதகர் (வயது 52) ஒருவரும் லொறியொன்றின் உதவியாளர் ஒருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவர் மீதும் வேகமாக பயணித்த வேன் மோதியதன் காரணத்தினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் தலவத்தகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சீனாவுடன் பேச்சை ஆரம்பியுங்கள்! இலங்கையிடம் கோரும் சர்வதேச நாணய நிதியம்!

News Editor

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கு இரத்திரனியல் அட்டை…

wpengine

வலப்பனை மீட்புப் பணிகள் தொடர்கிறது

wpengine