உலக செய்திகள்

பிரேசில் உட்பட 12 நாடுகளுக்கு நாளை முதல் பயண தடை



(ஃபாஸ்ட் நியூஸ் |  இஸ்லாமாபாத்) – பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரேசில் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் பாகிஸ்தான் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரேசில், போட்ஸ்வானா, கொலம்பியா, தென்ஆப்பிரிக்கா, தான்சானியா, பெரு, கொமொரோஸ், கானா, கென்யா, மொசாம்பிக், ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகிய 12 நாடுகளுக்கு பயண தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை நாளை(23) முதல் அடுத்த மாதம் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Related posts

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்…

wpengine

சிட்னி செல்லும் வெளிநாட்டினர் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை – அவுஸ்திரேலியா

wpengine

பதான் கோட் தாக்குதலில் இந்தியா ஓவர் ரியாக்ட் பண்ணுகிறது – பாகிஸ்தான்

wpengine