Top Story 3உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் ‘புர்கா’ தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு வலியினை ஏற்படுத்தும் என பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டக் தெரிவித்துள்ளார். 

தேசிய பாதுகாப்பு அடிப்படையில், புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

“இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும் உள்ள சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு வலியை ஏற்படுத்துவதொன்றாகும். சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் அவையுடன் சம்பந்தப்பட்ட சவால்களால் இன்றைய பொருளாதார ரீதியாக கடினமான நேரத்தில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகளானது, பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும். ” என உயர் ஸ்தானிகர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவிற்கு பந்துவீச தடை…

wpengine

விசேட வைத்தியர்களது ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு…

wpengine

பிக்கு உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

wpengine