ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜபக்ஷ குடும்பத்தினரின் பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட கிட்டத்தட்ட 11 கொள்கலன்கள் கடலினுள்



கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இறுதி காலத்தினுள் பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட கிட்டத்தட்ட 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, லஞ்ச ஊழல் தொடர்பில் ஆராய்ந்த குழு சந்தேகிக்கின்றது.

மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகளுக்கிடையில் இது தொடர்பில் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக சகோதர ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியின் போது திருடப்பட்ட பெரிய அளவிலான பணத்திற்கு என்ன நடந்ததென்பது தொடர்பில் இதுவரையில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

எப்படியிருப்பினும் இதுவரையில் சேகரித்துள்ள தகவல்களுக்கமைய கிட்டத்தட்ட 10 அமெரிக்க டொலர் பில்லியன் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும், குறிப்பிட்டுச் சொல்வதானால் 2013ஆம் ஆண்டும் 5.31 டொலர் பில்லியன் ராஜபக்ஷ மற்றும் அக்குடும்ப உறுப்பினர்களினால் திருடப்பட்டுள்ளதாகவும், குறித்த பணம் இந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

“மக்கள் சக்தி கொழும்புக்கு” பேரணியாளர்களது இரவுப் பொழுது கழிந்தது இப்படித்தான்… (Photos)

wpengine

எதிர்கால ஜனாதிபதியாக மஹிந்த.. – சுப்பிரமணியன் சுவாமி புகழாரம்…

wpengine

பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?

wpengine