உள்நாட்டு செய்திகள்

பேரூந்து குடைசாய்ந்ததில் 35 பேருக்கு காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் |   பதுளை) – பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்ததில் சுமார் 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பதுளை பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு பகுதிக்கு சென்ற குறித்த பேரூந்து இன்று(06) காலை 9 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேரூந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 35 பேரில், 10 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர், ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் பதுளை மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

நீதிபதிக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பிய சட்டத்தரணி ஒருவர் கைது

Azeem Kilabdeen

சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய 45 பேருக்கு பதவியுயர்வு.

wpengine

நேர்மறையான மாற்றம் பெண்களின் குரல்கள் மேலும் விரிவாக மற்றும் அதனை உள்ளடக்கிய நிர்வாகத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்கிறது”

Azeem Kilabdeen