உள்நாட்டு செய்திகள்

நான்காவது நாளாகவும் இரணைதீவில் போராட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் |  கிளிநொச்சி) – கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நான்காவது நாளாகவும் இன்றும் தொடர்கிறது.

கொவிட் தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை(03) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும்(06) இரணைதீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை நேற்று(05) மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தகவலறியும் உரிமைச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி விரைவில்…

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் களனி கட்சி அமைப்பாளராக சரத் பொன்சேகா..

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று…

wpengine