உள்நாட்டு செய்திகள்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்…



உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று(27) ஆரம்பமாகியுள்ளது. 93 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் அறிவிப்பு வௌியிடப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதிலிருந்து 14 ஆம் திகதி வரை வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களின் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சுயேட்சைகுழு வேட்பாளர்கள் 5,000 ரூபாவும், அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த வேட்பாளர்கள் 1500 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

பொது ஜன முன்னணி கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, தேர்தலை பிற்போடுவதற்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்றத்தில் இன்று இந்த கருத்தை முன்வைத்துள்ளார்

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 49 பேர் குணமடைந்தனர்

wpengine

நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…

wpengine